காவல் நிலையத்தில் இளம்பெண்ணை கற்பழித்த பொலீஸ்
பீகாரில் இளம் பெண் ஒருவரை காவல் துறையை சேர்ந்தவர் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் மார் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவர் அகாதளித்த ஆணுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இது தொடர்பாக தகவல் அளிக்க அவர் காகரியா மாவட்டம் மோர்சாய் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சத்யேந்திர சிங் என்பவரை காவல் நிலையத்தில் சந்தித்தார்.
விசாரணைக்கு சென்ற அந்த பெண்ணை சப்- இன்ஸ்பெக்டர் சத்யேந்திர சிங் காவல் நிலையத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரிகிறது.
இதுபற்றி அந்த பெண் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து, இடமாற்றம் செய்யப்பட்ட சத்யேந்திரசிங் விசாரிக்கப்பட்டு வருகிறார் .
0 Comments