மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞான ஆய்வுகூடம் 23.10.2013 அன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு கல்வி பண்பாட்டலுவல்கள்,காணி,காணி அபிவிருத்தி,போக்குவரத்து துறை அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சுpறப்பு அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலொசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.கௌரவ அதிதிகளாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,பிரதிக்கல்விப்பணிப்பாளர் விமலநாதன்,கோட்டக்கல்வி அதிகாரி பாலச்சந்திரன்,சட்டத்தரணி சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சுமார் 25 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டது.
புhடசாலைகளின் பௌதீக வளங்களின் தேவைகளை குறைக்கும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் பின்தங்கிய பாடசாலைகளை வலூவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்போது இடம்பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.
0 Comments