இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மநாட்டினை பகிஷ்கரிக்கும் முயற்சியில் ஆபிரிக்க நாடுகள் இணைந்து செயற்படுவதாக உள்ளுர் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உகண்டா, தன்சானியா, ருவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா, சாம்பியா, கென்யா ஆகிய ஆபிரிக்க நாடுகளே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்றும் அந்த உள்ளுர் ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் தொடர்புபடாத சில பிரச்சினைகளுக்காகவே இந்த நாடுகள் பொதுநலவாய மகாநாட்டைப் பகிஷ்கரிக்கவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. கென்ய ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொதுநலவாய மகாநாட்டினைக் கென்யா பகிஷகரிக்கவுள்ளது.
|
கென்யாவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலேயே ஏனைய ஆபிரிக்க நாடுகளும் பொதுநலவாய மகாநாட்டினை பகிஷ்கரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.
உச்சிமாநாட்டை பகிஷ்கரிக்க கென்யா பிரசாரம் செய்யவில்லை!- கென்யா மறுப்பு
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று ஏனைய ஆபிரிக்க நாடுகள் மத்தியில் தாங்கள் பிரசாரம் செய்யவில்லை என்று கென்ய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. நைரோபியின் உள்ளூர் பத்திரிகையான 'ஸ்டார்' கென்யா, கொழும்பு உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்று பல ஆபிரிக்க நாடுகள் மத்தியில் பிரசாரம் செய்து வருவதாக செய்தியொன்று வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை கென்ய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. உகண்டா, தன்சான்யா, ருவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா, சம்பியா ஆகிய நாடுகள் மத்தியில் இந்த பிரசாரத்தை கென்யா மேற்கொண்டிருந்தது என்று அப்பத்திரிகை அறிக்கை மேலும் தெரிவித்திருந்தது.
|
0 Comments