வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுவதனால் நாட்டில் மீண்டும் இன வாதம் ஏற்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச கண்டம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தையில் நேற்றை தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டும் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனின்,
தெற்கு பகுதியில் தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளமையினையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் விமல் வீரவன்சதெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதனை ஏற்றுக்கொள்ள முடியாத என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் கூற்றினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments