விபத்தில் சிக்கி இலங்கைப் பெண் மரணம்: இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் சம்பவம்
இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் பேர்மிங்ஹாமில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும் போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லொறி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லொறி சாரதியிடம் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்
0 comments: