Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவரிடையே பாலியல் ஊக்க மருந்து பாவணை அதிகரித்துள்ளது!


இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே பாலியல் ஊக்க மருந்து பாவணை அதிகரித்துள்ளதாக வாசனை திரவியங்கள் மற்றும் ஒடதங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த பாலியல் ஊக்க மருந்து பழக்கம் பிற்காலங்களில் பக்கவிளைவுகளையும், பாலியல் ரீதியான பாதிப்புக்களையும் ஏற்படும் என அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இளைய சமூதாயம் மன ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். ”Sildenafil” என்ற ஊக்க மருந்தின் பாவணையே தற்போது அதிகரித்துள்ளது. இந்த ஊக்க மருந்து பல்வேறு பெயர்களில் இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாது தனியார் மருந்தகங்களில் இந்த ஊக்க மருந்துகள் அநேகமாக இவை விற்பனை செய்யப்படுகின்றன. தனியார் மருந்தகங்களில் இந்த விற்பனையைத் தடுக்க முடியாதுள்ளதாகவும், மிகவும் சூட்சுமமான முறையிலேயே இந்த ஊக்க மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் இதற்கு அடிமையாக நேரிடுவதாகவும், இந்த மாத்திரைகள் இன்றி பாலியல் உறவில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்படுவதாகவும் இதனால் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறான ஊக்கமருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனைகள் இன்றி பயன்படுத்துவது உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்துமளவிற்கு ஆபத்தானவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தமது பிள்ளைகள் இளம் பருவத்தில் கூட்டு சேரும் நண்பர்கள், பழக்க வழக்கங்கள் குறித்து பெற்றோரும் கூடுதலாக அவதானிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment

0 Comments