Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் வெடிபொருட்கள் மீட்பு

கல்முனை பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் வெடிபொருட்கள் மீட்பு

கல்முனை பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து இன்று  மாலை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கல்முனை இரண்டாம் பிரிவு அம்மன் கோவில் வீதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து, ஏ.கே.47 ரக துப்பாக்கியின் இரண்டு மகசீன்கள், 70 ரவைகள் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து இன்று மாலை 4.00 மணியளவில், அந்தப் பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் இவற்றை மீட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments