Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் பாதயாத்திரை இலங்கையில் முதியோர் தொகை 2050ம் ஆண்டளவில் 30 வீதமாக உயரும் வைத்திய அதிகாரி தெரிவிப்பு

கல்முனையில்  பாதயாத்திரை இலங்கையில் முதியோர் தொகை 2050ம் ஆண்டளவில் 30 வீதமாக உயரும் வைத்திய அதிகாரி தெரிவிப்பு (படங்கள் இணைப்பு )

இலங்கையில் 12 வீதத்தினராக இருக்கும் வயோதிபர் 2050 ஆகும்போது 30வீதமாக உயரும் என கல்முனை வைத்தியசாலையின் உளநலத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி சாரா சராப்டீன் தெரிவித்தார்.
உலக உளநல நாள் நிகழ்வுகளை முன்னிட்டு நேற்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உள நலப்பரிவின் ஏற்பாட்டில் வைத்திய அத்தியட்சகர் லங்காதிலக ஜயசிங்க கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் முதல்வர் எம்.ஸ்ரீபன் மத்தியு மற்றும் வைத்தியசாலை வைத்தியர்கள் பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டபோது வைத்திய அதிகாரி சாரா சராப்டீன் இவ்வாறு தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபன புள்ளி விபரங்களின் படி 800மில்லியன் முதியோர்கள் உலகம் முழுவதிவும் பரந்து வாழ்கின்றனர். இத்தொகை 2050 ஆகும் போது 2 பில்லியனாக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகின்றது.
முதியோர்களின் வாழ்க்கைக்காலம் அதிகரித்தமைக்குக் காரணம் மருத்துவ வசதிகள் அதிகரித்தமை, நல்ல வாழ்க்கைத்தரம், போசாக்கான உணவு என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments