பைலின் புயலினால் இந்தியாவின் ஒரிசா மானிலத்தில் 6 பேர் பலி பலத்த மழை (படங்கள் இணைப்பு )
மிகப்பயங்கரமாக வர்ணிக்கப்பட்ட பைலின் புயல் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் மற்றும் பாரதீப் இடையே கரையை கடந்தது.
புயல் காரணமாக பலத்த 200 கி.மீ., காற்று வீசியது. இதனால் பல மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடீசாவில் பலத்த மழை பெய்து வருகிறது.
கஜபதில குர்தா, பூரி, ஜகத்சிங்பூர், நாயகர்க், கட்டாக், பாத்ரக் கேந்டிரபாரா மற்றும் புவனேஸ்வரின் கடற்கரையோரம் ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்த புயலின் தாக்கம், புயல் கரையை கடந்த பின்னர் 6 மணி நேரத்துக்கு குறையாது என வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறினார்.
புயல் கரையை கடக்க உள்ளதால், ஆந்திரா மற்றும் ஒடீசாவின் கடற்கரை பகுதியில் வசித்த சுமார் 5.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். புயல் காரணமாக ஆந்திர , ஒடிசா பகுதியில் பலத்த மழை பெய்தது. அனைத்து துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த புயலுக்கு ஒடிசாவில் 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதற்கிடையில் ஒடிசாவில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 18 பேர் திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களை மீட்க கடலோர காவல்படையினரின் உதவியை மாநில அரசு கோரியுள்ளது. இந்தியாவில் கடந்த 14 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
300 கி.மீட்டர் வேகத்தில் காற்று : அந்தமான் நிக்கோபாத் பகுதியில் உருவான புயல் சின்னம் நகர்ந்து தற்போது ஒடிசாவில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து ஆந்திரமாநிலம் கலிங்கப்பட்டி ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கோபால்பூரில் கரையை கடக்கும். இந்த புயல் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நேரத்தில் காற்று 300 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும். அலை 26 அடி உயரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த புயல் தாக்கம் இருக்கும் என்றும் அமெரிக்காவை தாக்கிய கத்ரீனா புயலை விட கொடூரமாக இருக்கும் என்றும் அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து : ஆந்திராவில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும் , 10 க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ்ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்புவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒடிசா கடல் பகுதியில் தவிப்பதாக வந்த தகவலை அடுத்து மீனவர்களை காப்பாற்ற கடலோர காவல் படையினருக்கு ஒடிசா மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய இடர் மேலாண் அமைப்பு ஆலோசனை: பெரும் இடர் ஏற்படும் போது செயல்படும் முக்கிய அமைப்பான தேசிய பேரிடர் மேலாண் அமைப்பினர் இன்று மாலை 4 மணியளவில் அவசரமாக கூடி விவாதிக்கின்றனர். எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தை கூட்டுமாறு மத்திய அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.
கடும் அலர்ட்டில் பகுதிகள்: இந்த புயல் காரணமாக ஏறக்குறைய 13 மாவட்டங்கள் இந்த கடும் பாதிப்பை சந்திக்கும் என தெரிகிறது. ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் விஜயநகரம், ஒடிசாவில் பேராம்பூர் மாவட்டம் கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகள் ரெட் அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளன.
தயார் நிலையில் ராணுவம்: புயல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே, அந்தோணி உத்தரவிட்டுள்ளார். மருத்துவக்குழுக்கள், மீட்பு படையினர் ஹை அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். கடலோர காவல் படையினர் ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
பிரதமர் உத்தரவு:பைலின் புயல் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு பணியில் விமானங்கள்: பைலின் புயலால் பாதிக்கப்படும் அனைத்து பகுதிளிலும் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது என உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார். மேலும் அவர், புயலால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12 ஹெலிகாப்டர் 12 விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என கூறினார்.
மரம் விழுந்து 3 பேர் பலி: இந்த புயல் காரணமாக ஒடிசாவில் மரம் விழுந்ததில் பெண் உள்பட 3 பேர் பலியாயினர்.
ஜனாதிபதி பயணம் ரத்து: புயல் காரணமாக மேற்குவங்கம் சென்ற ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தனது பயணத்தை முடித்து கொண்டு அவசரமாக டில்லி திரும்பினார். முப்படை தளபதிகள் அவரிடம் தொடர்பில் உள்ளனர்.
0 Comments