கனடா உறங்கா விழிகள் அமைப்பின் நிதி உதவியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால் இவ் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள துளசி மண்டபத்தில் கடந்த 2013.10.19 சனிக்கிழமை நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு த.தே.ம.மு வின் கல்விமேம்பாட்டுப் பிரிவு இணைப்பாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தலைமை தாங்கினார்.
|
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலாநிதி கோணாமலை கோணேசபிள்ளை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி த.ஜீவராஜ் - தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர், கலாநிதி குணபாலன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(சட்டத்தரணி) - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), செல்வராசா கஜேந்திரன் (முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர், விஸ்வலிங்கம் மணிவண்ணன்(சட்டத்தரணி), சி.அ.யோதிலிங்கம்(அரசியல் ஆய்வாளர்) ஆகியோரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் 9 பேரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த 35 மாணவ மாணவிகளும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
![]() ![]() ![]() ![]() ![]() |
0 Comments