Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜெயசூரியாவின் மனைவி விவாகரத்து வழக்குத்தாக்கல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவருமான சனத் ஜெயசூரியாவின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சனத்தின் மனைவியான சன்ரா ஜெயசூரியா, கொழும்பு நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் திகதி விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்தார் என்று அவருடைய வழக்கறிஞர் அனோமா குணதிலக்க தெரிவித்தார் மேலும் சனத் ஜெயசூரியாவிற்கு அறிவிப்பு கொடுத்தபின் வழக்கு தொடரும் என்றும் கூறினார்.

ஏப்ரல் 2010 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சனத் ஜெயசூரியா பிரதியமைச்சராக அமைச்சராக இம்மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவியின் விவாகரத்து விண்ணப்பத்தில் தலா இருபது மில்லியன் ரூபாய் வீதம் தனக்கும், தனது மூன்று பிள்ளைகளுக்கும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments