மாத்தளை, கலேவலைப் பிரதேசத்தில் நான்கு அங்குலம் நீளமான இராட்சத நுளம்பு ஒன்று நேற்று திங்கட்கிழமை பிடிக்கப்பட்டுள்ளது. கலேவல மொரகொல்லாகம என்ற பிரதேசத்தைச் சேர்ந்த சாந்த பண்டார என்பவரது வீட்டிலே இந்த நுளம்பு உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நுளம்பு கலேவலை சுகாதாரப் பரிசோதகரிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி நுளம்பு டெங்கு நோய் பரப்பும் நுளம்பின் வடிவத்தை உடையதாக தெரிவிக்கப்படுகின்றது. கலேவலை பொது சுகாதாரப் பரிசோதகர் ராஜா நவரத்ன இது பற்றித் தெரிவிக்கையில், அளவில் பெரிய உடம்பைக் கொண்ட இவ்வாறான நுளம்புகள் நோய்க் காவியாகத் தொழிற்பட்டமை பற்றி இது வரை எங்கும் பதிவாகவில்லை என்றும் இந்த நுளம்பு பற்றி அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments