2 பஸ்கள், லொரி மோதி விபத்து : 13 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி
இந்தியாவின் அசாமில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே 28 பேர் பலியாகியுள்ளனர்.
அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் இரண்டு மினி பேருந்துகள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன.
இரண்டு பேருந்துகளிலும் அளவுக்கு அதிகமான மக்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தோஹல்பாரா என்ற இடத்தில் பேருந்துகள் சென்று கொண்டிருந்தபோது மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த லொரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த கொடூர விபத்தில், சம்பவ இடத்திலேயே 13 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானார்கள். மேலும், 10 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் பார்பேட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்திற்கு காரணமான லொரி சாரதி தலைமறைவாகியுள்ளார். மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த விபத்து குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments