Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய புதையல்

ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய புதையல்




ஆல்ப்ஸ் மலையில், பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. 


பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய அவருக்கு பழங்கால பெட்டியில் விலை உயர்ந்த ஆபரண கற்கள் அடங்கிய புதையில் கிடைத்தது. 



அந்த பெட்டியில் இருந்த மரகதம், மாணிக்கம் மற்றும் நீல நிற கற்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் (இந்திய ரூபாய்) அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. 



அந்த அபூர்வ புதையலை அவர் தனது வீட்டிற்கு எடுத்துச்செல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். 



அந்த கற்களில் அவை இந்தியாவில் செய்யப்பட்டவை என்று பொறிக்கப்பட்டு இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1950 மற்றும் 1966–ம் ஆண்டுகளில் இரு ஏர் இந்தியா விமானங்கள் அந்த மலைச்சிகரத்தில் மோதி சிதறின. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிர் இழந்தனர். 



அந்த பயணிகளின் உடைமைகளும் அவர்களுடன் புதைந்துவிட்டன. தற்போது மலையேறும் வாலிபரிடம் கிடைத்தது அந்த பயணிகளில் ஒருவருடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 



அது குறித்து இந்திய அரசுக்கு பிரான்சு அரசு தகவல் கொடுத்து அந்த பெட்டி பற்றிய விவரங்களை கேட்டு உள்ளது. 



இந்தியாவில் அந்த புதையலுக்கான உரிமையாளர் கண்டு பிடிக்கப்படாவிட்டால், பிரான்சு நாட்டு சட்டப்படி, அதைக் கண்டெடுத்த மலையேறும் வாலிபருக்கே அது சொந்தமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 



புதையலை கண்டதும், நேராக பொலிசாரிடம் ஒப்படைத்த அந்த வாலிபரின் நேர்மையை பொலிசார் பாராட்டினார்கள். 

Post a Comment

0 Comments