Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆனந்த சங்கரி தோல்வி

ஆனந்த சங்கரி தோல்வி



தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.அனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 


இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி  மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதன் அடிப்படையில், இலங்கை தமிழரசு கட்சி சார்பாக ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளையும் குருகுலராஜா 26,427 விருப்பு வாக்குகளையும் பசுபதிப்பிள்ளை 26,132 விருப்பு வாக்குகளையும் திருலோகமூர்த்தி 4,199 விருப்பு வாக்குகளையும் விணுபானந்த குமாரி 2,953 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக தவநாதன் 3,753 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments