மெக்சிகோவில் வெள்ளம்:100 பேர் பலி
மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அகபுல்கோ என்ற இடத்திலிருந்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஒசாரியோ சாங் இச்செய்தியை தெரிவித்தார்.
அப்போது அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனா நீட்டோவும் அருகில் இருந்தார்.அங்குள்ள லா பின்டாடா கிராமத்தில் ஏற்பட்ட பெருத்த நிலச்சரிவால் பாதி கிராமம் மூழ்கியது. இதில் 101பேர் பலியானதாகவும் 68 பேர் காணாமல் போனதாகவும் ஒசாரியோ சாங் தெரிவித்தார்.
0 Comments