Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் லீக்!

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் லீக்!

5-வது சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஐபிஎல் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது.மும்பை இண்டியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விளையாடவுள்ள கடைசி சாம்பியன்ஸ் லீக் போட்டி இதுவாகும். ராஜஸ்தான் கேப்டன் திராவிடுக்கும் இதுவே கடைசிப் போட்டியாக இருக்கலாம். கடந்த ஐபிஎல் போட்டியில் தனது “ஹோம் கிரவுண்ட்” ஆன ஜெய்ப்பூரில் நடைபெற்ற 8 போட்டிகளிலும் வாகை சூடிய திராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணி, இந்த லீக் போட்டியிலும் வெற்றிச் சாதனையை தொடரும் முனைப்போடு மும்பையை எதிர்கொள்கிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் “ஹோம் கிரவுண்டில்” நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வென்ற இரு அணிகளில் ராஜஸ்தானும் ஒன்று.அந்த அணியில் கேப்டன் திராவிட், ஷேன் வாட்சன், அஜிங்க்யா ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியவர்கள். பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் ராஜஸ்தான் அணிக்கு பலம் சேர்க்கும் வாட்சன், கடந்த ஐபிஎல் போட்டியில் 543 ரன்களைக் குவித்ததோடு, 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.ராஜஸ்தான் பௌலர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கியதால், அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரும் விளையாடவில்லை. இருப்பினும் ஷேன் வாட்சன், ஜேம்ஸ் பாக்னர், ஷான் டெய்ட், பின்னி, கெவோன் கூப்பர் என வலுவான பௌலர்களைக் கொண்டுள்ளது ராஜஸ்தான்.

Post a Comment

0 Comments