Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மத்திய மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது

மத்திய மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
மத்திய மாகாணத்துக்கான தேர்தலில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய அனைத்து மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
அந்தக் கட்சிக்கு அங்கு மொத்தமாக (34 இடங்களும், போனஸாக 2 இடங்களுமாக) 36 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 16 இடங்களும், ஜனநாயகக் கட்சிக்கு( சரத்பொன்சேகா கட்சி) 2 இடங்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பி பிரிவுக்கு 2 இடங்களும், மலையக மக்கள் முன்னணிக்கு 1 இடமும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இங்கு ஆளும் கட்சியில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கண்டி மாவட்டத்தில் ஆளும் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 9 இடங்களையும், ஜனநாயகக் கட்சி ( சரத்பொன்சேகா கட்சி) 2 இடங்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (பி பிரிவு) 1 இடத்தையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்தையும் பெற்றுள்ளன.
மாத்தளையில் ஆளும் கட்சி 7 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 இடங்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பி பிரிவு 1 இடத்தையும் பெற்றுள்ளன.
நுவரெலிய மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கூட ஆளும் கட்சியே முன்னணி பெற்றுள்ளது. அதற்கு அங்கு 11 இடங்களும், ஐக்க்ய தேசியக் கட்சிக்கு 4 இடங்களும், மலையக மக்கள் முன்னணிக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
நுவரெலியா மாவட்டம் வாக்கு விபரம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 225,307 --- 68.87 % --- 11 இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி ---- 67,263 ---- 20.56 % ---- 4 இடங்கள்
மலையக மக்கள் முன்னணி ---- 23,455 --- 7.17 % --- 1 இடம்
ஜனநாயகக் கட்சி ---- 3,385 ---- 1.03 %
------------------------------
கண்டி வாக்கு விபரம் :
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ---- 355,812 --- 55.76 % --- 16 இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி --- 200,187 ---- 31.37 % ---- 9 இடங்கள்
ஜனநாயகக் கட்சி ---- 37,431 ---- 5.87 % --- 2 இடங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (P.Wing) ---- 18,787 ---- 2.94 % --- 1 இடம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 11,137 ---- 1.75 % --- 1 இடம்
மக்கள் விடுதலை முன்னணி ---- 7,640 ---- 1.20 % ----
சிறி லங்கா மகஜன எக்சத் பெரமுன --- 1,550 --- 0.24 %
மலையக மக்கள் முன்னணி ---- 1,458 ---- 0.23 %
----------------------------------------------------------------------------------------------------------------------------
மாத்தளை வாக்கு விபரம்:
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு --- 135,128 --- 59.99 % --- 7 இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி --- 63,365 ---- 28.13 % ---- 3 இடங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (P.Wing) --- 10,498 --- 4.66 % --- 1 இடம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 6,651 ---- 2.95 %
------------------------------------------------------------------------
அதேவேளை நுவரெலிய மாவட்டம் கொத்மலை தொகுதியின் முடிவுகளும் வந்திருக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 33,520 --- 70.28 %
ஐக்கிய தேசியக் கட்சி --- 9,794 ----- 20.54 %
மலையக மக்கள் முன்னணி --- 2,891 --- 6.06 %
ஜனநாயகக் கட்சி --- 532 ---- 1.12 %
மக்கள் விடுதலை முன்னணி --- 455 --- 0.95 %
ஈழவர் ஜனநாயக முன்னணி ---154 --- 0.32 %

Post a Comment

0 Comments