Home » » வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!

வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!

வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோகவெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்றஉறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்
தலைமையில்இன்றுயாழ்ப்பாணத்தில்கூடி,விக்னேஸ்வரன்அவர்களைஉத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவுசெய்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேடகூட்டமொன்று இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில்ஆரம்பமாகி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்து கொண்டுஉத்தியோகபூர்வமாக திருசீ.வி..விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாணமுதலமைச்சராக ஏகமனதாக தெரிவு செய்தார்கள்.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களுமான இராசம்பந்தன்மாவை சேனாதிராஜா,சரவணபவன்தர்மலிங்கம் சித்தார்த்தன்சுரேஸ் பிரேமச்சந்திரன்செல்வம்அடைக்கலநாதன்எம்..சுமந்திரன்சிறீதரன்சிவசக்தி ஆனந்தன்விநோநோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில்கடந்த 1987 ம் ஆண்டுஇலங்கை இந்திய ஓப்பந்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப்பகிர்ந்தளிப்பதற்காக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து, 1988 ம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டதுஆனால் அந்த மாகாணசபை செயலிழந்து போனதுபின்னர் வடக்கும் கிழக்கும் இரண்டாகப்பிரிக்கப்பட்டன.
ஆயினும் அப்போது உறுதியளிக்கப்பட்ட மாகாண மட்டத்திலானஅதிகாரங்களைக் கொண்ட வட மாகாண சபைக்கான தேர்தல் 25வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக இப்போதுதான்நடந்தேறியிருக்கின்றது.
இந்தத் தேர்தலில் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியகூட்டமைப்பு கைப்பற்றி வரலாற்று ரீதியான சாதனையைப்படைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |