புற்று நோயைத் தடுக்கும் உணவுகள்!
வெங்காயம்:
வெங்கயத்தில் அல்லிசின் என்ற புற்றை எதிர்க்கும் வேதிப்பொருள் உள்ளது.சமைத்தபின் சாப்பிடுவதைவிட பச்சையாக உண்பது சிறந்தது
மாதுளம்பழம்:
மாதுளம்பழத்தில் எலாஜிக் ஆசிட்(ellagic acid) என்ற மூலப்பொருள் உள்ளது.இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும் .
தக்காளி:
தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமிப்பொருள் மிகச்சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட். இது பல்வேறுவகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மைவாய்ந்த்து. குறிப்பாக ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றினை தடுக்கும்
முட்டைக்கோஸ்,காலிஃபிளவர்:
இவற்றில் உள்ள ஃபைட்டோ ந்யூட்ரியண்ட்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுசெல்களின் வள்ர்ச்சிவேகத்தைக் குறைக்கும் தன்மையுடையது
தேநீர்:
தேநீரில் உள்ள கேட்டச்சின் என்ற பொருள் நுரையீரல் .மார்பு,ப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றினைத் தடுக்கவல்லது.முக்கியமாக க்ரின் டீ எனப்படும் பச்சை தேநீரில் இந்த பலன்கள் அதிகம்.
மஞ்சள்:
குர்க்குமின் என்ற புற்றை எதிர்க்கும் பொருள் மஞ்சளில் உள்ளது.தமிழர்கள் சங்ககாலத்தில் இருந்தே இதை உபயோகிக்கின்றனர்
ஆளி விதை(Flaxseed):
இதில் உள்ள ஒமேகா 3 (அமோகா அல்ல) கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை
சால்மன் மீன்:
இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை
சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
நமக்கு நன்மை செய்யும் ஒரே கிழங்கு இது. இதில் நிறைய பீட்டா கரோட்டின் என்ற நிறமி உள்ளது.இது நுரையீரல் .மார்பு,இரைப்பை மற்றும் குடல் புற்றுநோயைத்தடுக்க வல்லது.
திராட்சை,ஆரஞ்சு,ப்ரக்கோலி:
மேலே கூறிய மூன்று பொருட்களிலும் விட்டமின் சி நிறைய உள்ளது. இவைகல் புற்றைஉருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தடுப்பதின் மூலம் நன்மைசெய்கின்றன
வேர்க்கடலை:
இதில் உள்ள விட்டமின் இ – கல்லீரல்,பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றைத்தடுக்கவல்லது.
0 comments: