யாழில் இராணுவம் தனது வேட்பாளர்களுக்கு சப்போட் - காமன்வெலத் கண்காணிப்பாளர்கள் அறிக்கை !!
யாழில் நடந்த மாகாணசபைத் தேர்தலின் போது, இராணுவத்தினர் தம்மால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரிக்க உதவினார்கள் என்று காமன்வெலத் ஒன்றிய கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தேர்தலை கண்காணிக்க யாழ் சென்ற காமன்வெலத் நாடுகளின் கண்காணிப்பாளர்கள் தமது அறிக்கையை நேற்றைய தினம்(திங்கட்கிழமை) கொழும்பில் வைத்து வெளியிட்டுள்ளார்கள். தேர்த்தல் அமைதியாக நடந்தபோதும் பாரிய அளவில் இராணுவத்தினர் அங்கே குவிக்கப்பட்டு இருந்ததாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவத்தினர் குறித்த சில வேட்பாளர்களுக்கு தமது பலத்தை ஆதவை வழங்கியதாகவும், அவர்களுக்கு வாக்கு சேர்ப்பதற்காக வீதிகளில் இறங்கி வேலைசெய்ததை தாம் அவதானித்ததாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கை வெளியானது தொடர்பில் இலங்கை அரசு எக்கருத்தையும் தெரிவிக்கவில்லை. நடைபெற்று முடிந்த தேர்தலில் வெளியாகியுள்ள அறிக்கை வரவேற்க்க தக்க வகையில் இருப்பதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments