வரலாற்றுச் சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலை இலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையினைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா சத்தத்தின் மத்தியில் வெளிவீதி வந்த விநாயகப்பெருமானும் தான்தோறீஸ்வரப் பெருமானும் விநாயகப் பெருமான் பிள்ளையார் தேரிலும் தான்தோறீஸ்வரர் பார்வதி சமேதராய் சித்திரத் தேரிலும் ஏற தேசத்து வண்ணக்குமார் வடத்தை பகதர்களிடம் வழங்க ;ஆண்கள் வடம் பிடித்து இழுக்க கால் புதையும் மணல் வீதியில் ஒருவித சத்தத்துடன் ஆடி அசைந்து சென்ற காட்சி அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. தேரோட்டத்தினைத் தொடர்ந்து இரவு முனைக்காடு வீரபத்திரர் ஆலய வீதியில் திருவேட்டை இடம்பெற்றதுடன் இன்று காலை பெருமானின் தீர்த்தொற்சவமும் இடம்பெறவுள்ளது.