Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்


எதிர்வரும் மாதங்களில் அதிக வாகனங்களுக்குக் கேள்வி ஏற்பட்டால், அவை வெளிநாட்டு இருப்புக்களை பாதிக்குமாக இருந்தால் மாற்று ஏற்பாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அடுத்த பாதீட்டில் வாகன இறக்குமதி மற்றும் வாகன நிதி வசதிகள் மீதான வரிகளை அதிகரிப்பது குறித்து நிதி அமைச்சு பரிசீலிக்க வேண்டியிருக்கும் என திறைசேரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதன் பின்னர் இறக்குமதியாளர்கள் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள நாணயக் கடிதங்களைத் திறந்துள்ளனர்

வாகன இறக்குமதி

அவற்றில் 550 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள நாணயக் கடிதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மிகுதியானவை நிலுவையில் உள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தற்சமயம் வெளிநாட்டு இருப்பு சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளன.

இந்த நிலையில், வாகன இறக்குமதி மூலம் வெளிநாட்டு இருப்பு பாதித்தால் அதற்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனிப்பட்ட பாவனைக்காக சுமார் 30,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments