Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர் தொழிற்சங்கம், அரசியல் தரப்பினர் கடும் எதிர்ப்பு !


 புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். உத்தேச கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சு தொழிற்சங்கங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல், மறுசீரமைப்புக்களை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.


வரலாற்று மற்றும் அழகியல் கல்வி மீது அக்கறை கொண்டு எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. அரசாங்கத்தை எவ்வகையில் நெருக்கடிக்குள்ளாக்களாம் என்பதை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி மறுசீரமைப்புக்களை அமுல்படுத்த வேண்டும். தொடர்ந்து தாமதித்துக் கொண்டிருக்க முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026. ஆம் ஆண்டு முதல் உத்தேச கல்வி மறுசீரமைப்பினை அமுல்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.புதிய கல்வி மறுசீரமைப்பில் தாய்மொழி, கணிதம்,ஆங்கிலம்,விஞ்ஞானம் மற்றும் சமயம் ஆகிய பாடங்கள் கட்டாய பாடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.அத்துன் வரலாறு மற்றும் அழகியல் கலை பாடங்கள் தெரிவு பாடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள.

வரலாறு மற்றும் அழகியல் கல்வி ஆகிய பாடங்களை தெரிவு பாடங்களை வகைப்படுத்தியுள்ளமைக்கு ஆசிரியர் சங்கம் மற்றும் அரசியல் தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அகில இலங்கை ஐக்கிய ஆசிரிய சங்கத்தின் தலைவரான யல்வல பாக்ய தேரர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, வரலாறு மற்றும் அழகியற் கல்வி ஆகிய பாடங்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும்.கல்வி திட்டத்தை அமுல்படுத்த முன்னர் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகையில், தன்னிச்சையான முறையில் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை தயாரித்து அதனை பலவந்தமான முறையில் அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது முற்றிலும் தவறானது. தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது என்றார்.

Post a Comment

0 Comments