Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

லண்டனில் இருந்து சென்னை சென்ற மற்றுமொரு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் பாதிப்பு


360 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு நேற்றிரவு (15.06.2025) தரையிறக்கப்பட்டுள்ளது.

நடுவானில் பறந்த போது இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவசரமாக மீண்டும் லண்டனில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு அசௌகரியம்

இதன் காரணமாக சென்னை மற்றும் லண்டனில், 700க்கும் மேற்பட்ட பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அண்மையில் இந்தியாவின் அகமதாபாத் விமான விபத்தின் பின்னர் விமான பயணங்களில் ஈடுபடுவோர் அச்ச நிலையில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments