Home » » 10 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கு கிடைத்த வெற்றி

10 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கு கிடைத்த வெற்றி

 


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அந்தவகையில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார்.

பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

மேலும் போட்டியில் தமது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதற்கமைய இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி இறுதியாக 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ததன் பின்னர் தற்போது 10 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |