Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் தன்மன் செட்டி குடி மக்களின் சித்திரத்தேரோட்டம்

 மட்டக்களப்பு  குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவிழா தேர் திருவிழா இன்று ( 18)  வெகு  விமர்சையாக இடம் பெற்றது .

இம் மாதம்  பத்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவில் நேற்று பதினெட்டாம் திகதி திருவிழாவும் இன்றைய தினம் ( 18 )  காலை 9:30 மணி அளவில் தேர் திருவிழா விசேட கிரியைகள் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சுவாமி உள் வீதி வலம் வருதல் நிகழ்வு இடம் பெற்றதை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக முத்து இரதத்தில் வள்ளி தெய்வானை சமேதரராய் முருகப்பெருமான் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார். 

நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது இக்கிரியை நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரத்தின முரசொலி மாறன் குருக்கள் தலைமையிலான குழுவினரால்  குறிப்பிடத்தக்கது.

 அரோகரா கோஷங்கள் முழங்க வேத பாராயணங்கள் ஒலிக்க வழி செய்வானை சமேதரராக முருக பெருமான் மக்களுக்கு அருள் பாலித்தார். 

தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெறும் பெருவிழாவில் நாளைய தினம் ( 19)  ஆவணி பூரணையில் சமுத்திர தீர்த்த  உற்சவம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது










Post a Comment

0 Comments