Advertisement

Responsive Advertisement

“அணி என்ற ரீதியில் தவறுகள் நிறையவே நடந்தது..”

 


இலங்கை கிரிக்கட் அணி இன்று (10) நாடு திரும்பிய நிலையில், அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் போட்டிகளின் தொடர் தோல்விக்கு அணியே காரணம் எனத் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. உண்மையிலேயே நடந்த போட்டிகளை அணி என்ற ரீதியில் சிறப்பாக நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து கவலையடைகிறோம். இந்தப் போட்டிகளில் எமக்கு நிறையவே பின்னடைவுகள் ஏற்பட்டது. தவறுகளை நிவர்த்தி செய்து, முன்னேறிச் செல்வோம்.

முக்கியமான இடங்களில் எம்மால் அணி என்ற ரீதியில் தவறுகள் நடந்தது. அதுதான் தோல்விக்காக காரணம் என்று நினைக்கிறோம். தோல்வியுற்ற எல்லா போட்டிகளிலும் துடுப்பாட்டத்திலோ, பந்து வீச்சிலோ, களத்தடுப்பிலோ அல்லது மூன்றிலுமே நாம் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் தான் போட்டிகளில் தோல்வியடையக் காரணம்.

கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் எம்முடன் இருந்தார்கள், அதிகமாக எங்களை நேசித்தார்கள், வெற்றியோ தோல்வியோ அவர்கள் எமக்கு உற்சாகமாக இருந்தார்கள். கவலையாக உள்ளது. அணி என்ற ரீதியில் நாம் அவர்களை எந்தவகையிலும் சந்தோசப்படுத்தவில்லை.

அழுத்தம் என்பது வீரர் ஒருவருக்கு எல்லா போட்டிகளிலும் இருக்கத்தான் செய்யும். உலகக் கிண்ணத்தில் அது சற்றே அதிகமாக இருக்கும். எல்லா போட்டிகளிலும் எமக்கு அழுத்தங்கள் என்பது பொதுவானது, அது எமக்கு பழக்கப்பட்டதொன்று. அணி என்ற ரீதியில் நாம் சிறப்பாக விளையாடவில்லை.

எமக்கு சிறந்ததொரு அணி ஒன்று உள்ளது. என்றாலும் இந்த போட்டிகளில் நாம் பாரிய பின்னடைவினை சந்தித்தோம். அணியில் உள்ள வீரர்கள் தப்பில்லை. என்றாலும், அணியாக விளையாடவில்லை. அது தான் எமது பின்னடைவுக்கு முக்கிய காரணம். அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

விரைவில் எமது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க எதிர்பார்த்துள்ளோம்..”

Post a Comment

0 Comments