இலங்கை கிரிக்கட் அணியுடன் இன்று (10) நாடு திரும்பிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, போட்டிகள் தோல்விக்கான காரணம் குறித்து விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
போட்டியின் தோல்விக்கு அணிக்கு வெளியில் நடந்த சதியே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் 02 நாட்களில் வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியினை தான் பொறுப்பேற்பதாகவும்,வீரர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை என்றும், இதற்குப் பின்னால் குறிப்பிட்ட குழுவொன்றின் சதி இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பல போட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை மரபுரிமையாக பெற்றிருந்தது.
0 comments: