Home » » ஆசிரியரின் மூர்க்கத்தனம் - கொடூர தாக்குதலுக்கு உள்ளான மாணவன்

ஆசிரியரின் மூர்க்கத்தனம் - கொடூர தாக்குதலுக்கு உள்ளான மாணவன்

 


ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்ததால் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாத்தளை நாவுல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார்.

எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுப்பு தெரிவித்தமையால் ஆசிரியரால் மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

10ம் வகுப்பு மாணவர் 

ஆசிரியரின் மூர்க்கத்தனம் - கொடூர தாக்குதலுக்கு உள்ளான மாணவன் | Teacher Brutally Assaulted The Student

10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான நிலையில் குறித்த மாணவன் அம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த மாணவர் தனது கட்டளையை நிறைவேற்றாமையினால் ஏற்பட்ட கோபத்தில் தாக்கியதாக ஆசிரியர் ஒப்புக்கொண்டுள்ளதுடன், மாணவர் மீது வேறு எவ்வித கோபமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |