ஹெரோயினுடன் தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு ஹெரோயின் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
0 comments: