Home » » மட்டக்களப்பு ஓட்டமாவடியில் களவாடப்பட்ட எழுபது இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் வாழைச்சேனைப் பொலிசாரால் மீட்பு

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் களவாடப்பட்ட எழுபது இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் வாழைச்சேனைப் பொலிசாரால் மீட்பு

 


ஓட்டமாவடி பிரதேசத்தில் திருடப்பட்ட எழுபது லட்சம் ரூபா பெறுமதியான 44.5 பவுன் எடையுடைய நகைகள் வாழைச்சேனைப் பொலிஸாரின் முயற்சியினால் மூன்று நாட்களில் மீட்கப்பட்டுள்ளது.


வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டாராவின் வழிகாட்டலின்கீழ் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெறும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜி.ஜி.குமாரிஸ்ரீ கருணாரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இத்திருட்டிற்காககப் பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைகிள் மற்றும் திருடப்பட்ட தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் கடந்த 03.01.2023 அன்று ஆசிரியர்களான தம்பதிகளின் வீட்டில் அவர்கள் பாடசாலைக்கு சென்றதன் பின்னர் காலை வேளையில் வீட்டின் கூரைவழியாக வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன் அலுமாரியில் வைத்திருந்த 44.5 பவுன் (356கிராம்) தங்க நகைகளை திருடிக் கொண்டு வீட்டிற்கு வெளியில் யாரும் வருகின்றார்களா என்று அவதானித்துக் கொண்டு நின்ற நண்பரின் உதவியுடன் சென்றுள்ளான்.

இத்திருட்டு சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வாழைச்சேனை மற்றும் மீறாவோடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தொடர்பான விசாரனைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தொடர்ந்தேர்ச்சியான திருட்டு சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் இதற்கு போதை பாவனையின் அதிகரிப்பே காரணம் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |