Advertisement

Responsive Advertisement

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்..! வடக்கு - கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை

 


மழை 

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது.

இதன் காரணமாக இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இன்று அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் இன்னும் சிறிது நேரத்தில் கன மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.

26.12.2022 வரை மழை

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்..! வடக்கு - கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை | Weather Today Sri Lanka

அதேவேளை எதிர்வரும் 26.12.2022 வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

Post a Comment

0 Comments