பரீட்சை நிலைய பாடசாலைகளிற்கு நாளை வெள்ளி விடுமுறை
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களுக்கு நாளை(16)வெள்ளி விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் கூறியுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 494 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையங்களுக்கு 16 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு இரகசிய ஆவணங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அன்றைய தினம் மேற்குறித்த நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments: