13-12-2022
க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பை பெறாத மாணவர்களுக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவர்களுக்கும் தொழில்நுட்ப கல்வி வாய்ப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 23ஆம் திகதி முதல் ஜனவரி 23ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பெப்ரவரி 15ஆம் திகதி தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
50 பாடநெறிகளுக்காக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
0 comments: