எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பில் நம்பிக்கை வெளியிட்டதாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி.ஜூலி சுங் (Ms.Julie Chung) நேற்று (08) திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனரின் மட்டக்களப்பிலுள்ள ஆளுநர் பங்களாவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுற்றுலா துறை தலைவர், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் கருத்துத் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குறித்த சந்திப்பு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் கடன் மறுசீர்ரமைப்பினை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான சகல வசதிகளையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளதாகவும், அதேவேளை கிழக்கு மாகாணம் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளதனால் விவசாயத்தினூடாக மாகாணத்தை தன்னிறைவுடைய மாகாணமாக பிரகடனப்படுத்த முடியும் என அவர் எதிர் பார்ப்பதாகவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
0 comments: