நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம்(15) 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அபாய எச்சரிக்கை
இதன்படி பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழையுடனான வானிலை நிழவும் சந்தர்ப்பங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கைவிடுத்துள்ளது.
0 comments: