எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்திற்காக 43,200 கோடி ரூபாயும் கல்விக்காக 50,400 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தவிர, பாதுகாப்புச் செலவினங்களுக்காக 36700 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்பிற்காக 57,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய குறிப்பிட்டார்.
அரச வருமானத்தை 8.5 வீதத்தில் இருந்து 13 வீதமாக அதிகரிக்கவும், அரச வருமானத்தில் 90 வீதத்தை வரி மூலம் பெறவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி -8 வீதமானது, எதிர்காலத்தில் -3 வீதமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அந்த வருடத்திற்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனங்கள் 788500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
0 comments: