Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேசிய பாடசாலைக்கு முற்றுப்புள்ளி கொத்தணி பாடசாலைகள் ஆரம்பம்

 


31-10-2022.

அனைத்து பாடசாலைகளுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் தேசிய பாடசாலை கருத்திட்டத்திற்கு தான் கொள்கை அளவில் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு வலக கல்வி பணிமனையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

தேசிய பாடசாலைகளுக்கு பதிலாக பல பாடசாலைகளை இணைத்து பாடசாலை கொத்தணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதமாகும் போது, நாடு முழுவதும் 1200 பாடசாலை கொத்தணிகளை ஆரம்பிப்பதற்கான இயலுமை கிடைக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலை கொத்தணிக்குள் காணப்படுகின்ற பாடசாலைகளுக்கு இடையில் முகாமைத்துவ செயற்பாடுகளின் ஊடாக பௌதீக மற்றும் மனித வளங்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறமை கிடைக்கும் என்பதுடன், செலவீனங்களை குறைப்பதற்கான பொறிமுறையாக இது அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்பாட்டின் ஊடாக, பாடசாலைகள் அல்லது வளங்கள் இடமாற்றப்படவோ அல்லது ஒதுக்கீடு செய்யவோ முடியாது என கூறிய அவர், பௌதீக மற்றும் தொழில்நுட்ப முறைகள் மூலம் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments