Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

 


21 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் இரத்மலானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 4 ஆம் திகதி மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றின் ஊழியர் ஒருவர் 21 இலட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடுவதற்காகச் சென்று கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கி காயப்படுத்திவிட்டு குறித்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​சந்தேகநபர்கள் இருவர் மற்றும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு கொள்ளைக்காக பயன்படுத்திய வேன், மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments