Home » » இலங்கையில் கிரிப்டோ கரன்சி மோசடி , 8000 பேருக்கு ஏமாற்றம் ! 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ! சீன பிரஜைகள் உள்ளிட்ட மூவர் கைது

இலங்கையில் கிரிப்டோ கரன்சி மோசடி , 8000 பேருக்கு ஏமாற்றம் ! 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ! சீன பிரஜைகள் உள்ளிட்ட மூவர் கைது

 


கிரிப்டோ கரன்சி என்ற விதத்தில் பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, இந்த பாரிய நிதி மோசடி தொடர்பிலான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

”ஸ்பாட் செயின் எனப்படும் பிரமிட் வகை நிதி மோசடி தொடர்பான முறைப்பாடு கிடைத்தது. இந்த வியாபாரம் தொடர்பான விசாரணையில், கீர்த்தி பண்டார என்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்”

”அவர் ஒரு சீன ஆணுடன் உறவு வைத்திருந்தார். ஷாங்காய் என்ற ஆண். அவரது காதலி வான் என்ற பெண்.”

”இந்த மூவரும் சேர்ந்து இந்தத் தொழிலை நடத்தினார்கள்.”

”இந்த இரண்டு சீன பிரஜைகளும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த முயற்சித்த போதிலும், அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.”

”அவர்கள் செய்தது வெவ்வேறு நபர்களை கிரிப்டோகரன்ஸிகளுக்கு ஈர்ப்பதாகும். 2020;ம் ஆண்டு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இங்கு பணத்தை முதலீடு செய்த பிறகு, அவர்களுக்கு வெவ்வேறு நன்மைகளைப் பெற்று தருவதாக கூறியுள்ளனர்”

”அதற்கென தனியான கணினி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிரிப்டோ கரன்சி வாங்குவதாகக் காட்டி இந்தத் தொழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.”

”ஆனால், வாடிக்கையாளர்கள் பலன்களைப் பெறப் போகும் போது, ​​எந்த வகையிலும் அவற்றைப் பெற முடியாமல், மேலிருந்து கீழாக இணைப்பை உடைத்து, கீழே உள்ள இருவருக்குள்ளும் உள்ள தொடர்பை மட்டுமே காட்டியுள்ளனர்.”

”இவ்வாறு, இலங்கையில் சுமார் 8,000 பேர் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர். சந்தேகநபர்கள் 2020ஆம் ஆண்டு முதல் 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

“சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |