Advertisement

Responsive Advertisement

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை! வெளியாகிய தகவல்



க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வருடம் டிசெம்பர் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட 6 மாதங்கள் ஆனதாகவும், 3 மாதங்களில் மீண்டும் அதே பரீட்சையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments