Advertisement

Responsive Advertisement

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான புதிய நடைமுறை! வெளியாகியுள்ள சுற்றறிக்கை

 


சுற்றறிக்கை

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுற்றறிக்கையை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார்.

பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும் போது சேலை அல்லது அலுவலகத்திற்கு பொருத்தமான ஆடையொன்றை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொருத்தமான அலுவலக ஆடை

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான புதிய நடைமுறை! வெளியாகியுள்ள சுற்றறிக்கை | Sri Lanka Government Servant Dress

இருப்பினும், சேலை உள்ளிட்ட ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் பின்பற்றுவதாகவும் பொருத்தமான அலுவலக ஆடை என்றால் என்ன என்பதை மறந்து விட்டதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Post a Comment

0 Comments