Home » » A/L மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில் !

A/L மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில் !

 


சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, ஒரு கல்வி வலயத்தில் இருந்து 30 பேர் என நாடு முழுவதிலும் உள்ள 99 வலயங்களைச் சேர்ந்த 2,970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புலமை பரில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5,000 உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருமுறையும் சாதாரண தரப் பரீட்சை வெளியாகி, க.பொ.த உயர்தரம் ஆரம்பமாகமுன்னர், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை ஊடக விளம்பரப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |