Home » » இன்று முதல் QR முறையில் மாத்திரமே எரிபொருள். ஒவ்வொரு சாரதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய 13 விடயங்கள்.*

இன்று முதல் QR முறையில் மாத்திரமே எரிபொருள். ஒவ்வொரு சாரதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய 13 விடயங்கள்.*



1. தேசிய எரிபொருள்

 கியூ.ஆர் அட்டை இன்றைய தினம் ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். கடைசி இலக்க எண் தகடு அமைப்பு, டோக்கன்கள் மற்றும் நடைமுறையில் இருந்த பிற ஏற்பாடுகள் அனைத்தும் நிராகரிக்கப்படும்ம். கியூ.ஆர் அட்டை மற்றும்  கோட்டா அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.

2. கியூ.ஆர் அட்டை முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எரிபொருள் நிலையங்களில் கியூ.ஆர் அட்டை ஐப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும்  கண்காணிக்கப்படும்.

3. வாகன (Chassis Number) எண்ணுடன் பதிவு செய்ய முடியாத வாகனங்களைப் பயன்படுத்துவோர் 

இன்று முதல் வருவாய் உரிம எண்ணுடன் (Revenue License number) பதிவு செய்யலாம்.

4. அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பொலிஸ் நிலையத்தின் ஊடாக அவர்களுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

5. ஜெனரேட்டர்கள், தோட்டக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள், தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தேர்வு ஆகியவற்றை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

6. பல வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் அனைத்து வாகனங்களையும் தங்கள் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்ய முடியும்.

7. பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இலங்கை அரச போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு டிப்போக்களில் ஊடாக வழங்கப்படும். அவை வழித்தட அனுமதி மற்றும் சேவையில் உள்ள கி.மீ.களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டைக் கொண்டு ஒதுக்கப்படும்.

8. பாடசாலை சேவை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து வாகனங்கள், தொழில்கள், சுற்றுலாத் துறை, நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் டீசல் எரிபொருள் தேவைகளையும் இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும்.

9. அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அவர்கள் கோரும் அளவு எரிபொருளை வழங்க வேண்டும்.

10. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பொலிஸ் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.

11. பொதுமக்கள் 0742123123 என்ற எண்ணுக்கு சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு அல்லது விற்பனை நடவடிக்கைகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோ ஆதாரங்களை WhatsApp இல் அனுப்ப முடியும். அவர்களின் கியூ.ஆர் அட்டை அணுகல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

12. 

இன்று திங்கட்கிழமையன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட்டத்தை கூட்ட வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுகொள்ளப்படுகின்றனர். 

13. கோவிட் மீண்டும் பரவி வருவதால், பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |