Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

 


மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவர், சடலமாக இன்று கண்டெடுக்கப்பட்டதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்

மட்டக்களர்பு வெளிச்ச வீட்டுவீதி பாலமீன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய வள்ளித்தங்கம் கந்தசாமி என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிமையில் வசித்துவந்த குறித்த வயோதிபப்பெணின் பிள்ளைகள், இன்று காலை அங்கு சென்றபோது குறித்த பெண்ணை காணாத நிலையில் அவரை அங்கு தேடியபோது, அவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் இருப்தை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments