Home » » சீரற்ற காலநிலையால் அனர்த்தம் - படையினரை களமிறங்குமாறு இராணுவ தளபதி உத்தரவு

சீரற்ற காலநிலையால் அனர்த்தம் - படையினரை களமிறங்குமாறு இராணுவ தளபதி உத்தரவு

 சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுமாறு இராணுத்தினருக்கு, இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே பணிப்புரை விடுத்துள்ளார்.


அதற்கமைய, உலப்பனை தவத்தந்தன்ன வீதியில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இலங்கை இராணுவத்தின் முதலாது படையணியின் 58 ஆவது படைப்பிரிவின் 5 ஆவது விஜயபாகு படைப்பிரிவின் படையினர் ஈடுபட்டனர்.

மேலும், மொரப்பே ரன்வந்தலாவ பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு படகு மூலம் அழைத்துச் செல்லும் பணியையும் படையினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், தியகல விதுலிபுர பிரதேசத்தில் மண்சரிவினால் உயிரிழந்த நபரின் சடலத்தை இராணுவத்தினர் கண்டுபிடித்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |