02-08-2022.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விலை குறைப்புக்கமைய பேருந்து கட்டணம் குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேற்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை மாத்திரம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 430 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்டணங்களை திருத்துவதாயின், எரிபொருளின் விலை சுமார் 4 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும். அதன் பிரகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா, கட்டணங்களை திருத்த முடியுமா என்பதை ஆராய்ந்து இன்று அறிவிப்பார்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒரு லீற்றர் டீசல் விலை சுமார் 20 வீதத்தால் குறைக்கப்பட்டதன் காரணமாக பஸ் கட்டணம், 2 மற்றும் 3 சதவீதத்தால் குறைக்கப்பட்டது.
40 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணத்தை 38 ரூபாவாக திருத்தியமைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: