அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
0 comments: