Advertisement

Responsive Advertisement

 


அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் எதிர்வரும் ஆண்டுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.சவால்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்.


கண்டி தலதா மாளிகை பெரஹரவின் நிறைவு நாளான நேற்று வெள்ளிக்கிழமை (12) கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில். பெருமைமிக்க பொறுப்பினை நிறைவேற்றியுள்ளமைக்கு முதலில் கண்டி தியவடன நிலமேவிற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இரண்டு வருட காலத்திற்கு பின்னரே கண்டி தலதா மாளிகை பெரஹராவை வெகுவிமர்சையாக நடத்த முடிந்தது.

கண்டி தலதா மாளிகை பெரஹரவில் சகல மதத்தவர்களும் கலந்துக்கொள்வார்கள்.இலங்கையின் சம்பிரதாயத்தின் ஒரு பகுதியாகவே கண்டி பெரஹர இடம்பெறுகிறது.நாட்டை பாதுகாப்பது பிரதான வேண்டுதலாக காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள சூழ்நிலையில் கண்டி பெரஹர இடம்பெறுவது கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்.நெருக்கடியான சூழல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.இதனை விட சவால்மிக்க காலம் தோற்றம் பெற முடியும்.

சகல சவால்களிலிருந்தும் மீண்டெழ வேண்டும், சிறந்த கொள்கையுடன் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் தயாராக வேண்டும, .தலதா மாளிகை உட்பட நாட்டின் சகல மதங்களில் செயற்பாடுகளும் எமக்கு ஆசிர்வாதத்தை முழுமையாக வழங்கும் என்பதை நம்புகிறேன்.

அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் எதிர்வரும் ஆண்டுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.சவால்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.


Post a Comment

0 Comments